பேஸ்புக்கின் 'அகுயிலா' - தமிழ் IT

Latest

Sunday, August 14, 2016

பேஸ்புக்கின் 'அகுயிலா'

droneகூகுள் தயாரித்து வெற்றி பெற்ற 'லூன்' (Loon) என்ற பறக்கும் இணைய பலூன்களுக்குப் போட்டியாக, பேஸ்புக் நிறுவனம் அகுயிலா (Aquila) என்னும் ஆளில்லா பறக்கும் சிறிய விமானம் ஒன்றை வடிவமைத்துள்ளது. சோதனை முறையில், அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், இதனைப் பறக்கவிட்டு, இணைய இணைப்பினை வழங்க முடியும் என்ற முடிவிற்கு வந்துள்ளது. 96 நிமிடங்கள் அரிசோனா பாலைவனத்தில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வெற்றி காணப்பட்டது என பேஸ்புக் நிறுவனர், மார்க் தன் பதிவில் தெரிவித்துள்ளார்.
கூகுள் நிறுவனம், வயர் இணைப்பு தர முடியாத இடங்களில், தன் “லூன்” (Loon) திட்டத்தில் மூலம் இணைப்பினை வழங்க முயற்சிகள் எடுத்து அதனை வெற்றிகரமாக சோதனை செய்தும் பார்த்து, சில இடங்களில் அமல்படுத்தியுள்ளது. விண்ணில் பறக்கும் ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன்களில், இணைய இணைப்பிற்கான சாதனங்கள் பொருத்தப்பட்டு, அவை தரையில் இயங்கும் சர்வர்களுடன் தொடர்பு கொண்டு, அணுக முடியாத இடங்களில் வாழும் மக்களுக்கு இணைய இணைப்பினை வழங்குகிறது.
அதே போல, பேஸ்புக் நிறுவனம் வடிவமைத்துள்ள 'அகுயிலா' என்னும் ஆள் இல்லா இலகுரக விமானம், ஒரு குழுவாக, 60 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து, தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு, கீழே வாழும் மக்களுக்கு, வயர் இணைப்பில்லாத இணைய தொடர்பினை வழங்க முடியும். இவை மூன்று மாதங்கள் பறந்தபடி இணைய இணைப்பினை வழங்கும். இந்த விமானங்கள், சூரிய சக்தியைப் பயன்படுத்தி கிடைக்கும் மின்சக்தியைப் பயன்படுத்தி பறக்கும் தொழில் நுட்பம் கொண்டவை.
இந்த இரு நிறுவனங்களும், உலகின் எந்த மூலையில் வாழும் மக்களும் இணையத் தொடர்பின்றி இருக்கக் கூடாது என முடிவெடுத்து இயங்கி வருகின்றன.

11113803_10102081915691061_835349162202507231_n_w_600

No comments:

Post a Comment

Pages