கலக்கிய கெலக்சி திரும்பப் போகிறது… - தமிழ் IT

Latest

Saturday, September 3, 2016

கலக்கிய கெலக்சி திரும்பப் போகிறது…

spiralbinder-2016-18Samsung Galaxy Note 7 Smart Phone கலின் விற்பனையை நிறுத்துவதாக Samsung நிறுவனம் அறிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் Samsung Phone களுக்கு என தனி இடம் உண்டு, எப்போதும் Samsung புது அம்சங்களுடன் வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் போன்களை அறிமுகப்படுத்தி வந்தது.

இந்நிலையில் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்டிருந்த Samsung Galaxy Note 7-யை இரண்டு வாரங்களுக்கு முன் வெளியிட்டது. இதுவரையிலும் 10 லட்சம் போன்கள் விற்பனையாகியுள்ள நிலையில், திடீரென நிறுவனம் போன்களை திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து சாம்சங் மொபைல் நிறுவனம் கூறுகையில், Samsung Galaxy Note 7 புதிய மொபைல் போன்களை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் சார்ஜ் செய்யும்போது போன் வெடித்துவிட்டதாக புகார் அளித்திருந்தனர்.

தொடர்ச்சியாக அந்த புகார்கள் வந்ததால் Samsung Galaxy Note 7 செல்போன் விற்பனை நிறுத்தப்படுகிறது.

ஏற்கெனவே இந்த ரக போனை வாங்கியிருந்த வாடிக்கையாளர்கள் அவற்றை எந்த திகதியில் வாங்கியிருந்தாலும் அதற்குப் பதிலாக புதியதொரு ஸ்மார்ட்போனை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Pages