i Phone 7 இன்று வெளிவருகிறது…? - தமிழ் IT

Latest

Wednesday, September 7, 2016

i Phone 7 இன்று வெளிவருகிறது…?

Mobil Phone யுகத்தில் பாரிய புரட்சியை கொண்டுவந்த்து Apple நிறுவனத்தின் iPhone தான் என்றால் மியையில்லை. iPhone இன் ஒவ்வொரு பதிப்பு வெளிவரும்போதும் அது வாடிக்கையாளர்களை மிகுந்த எதிர்பார்ப்புகளுக்குள் கொண்டு சென்றது, அதே போல வாடிக்கையாளர்கள் எதிர்பார்த்தை விட அதிகமாகவே iPhone வசதிகளை வழங்கி அவர்களை பிரம்மிக்கச் செய்துவந்தது.

இதே நேரம் இம்முறை வாடிக்கையாளர்களின் ஆவலத் தூடவைத்து கக்க வைத்த iPhone 7 இன்று உத்தியோகபூர்வமாக வெளிவரக் காத்திருக்கிறது. iPhone 7 வெளியீட்டு நிகழ்ச்சி, இன்று சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 3 மணிக்கு நடைபெறும் என அறியப்படுகிறது. அதே நேரம் Apple நிறுவனத்தின் அடுத்த வெளியீடுகள் பற்றிய சில உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் வெளிவந்துள்ளன. அவற்றில் சில...

iPhone 7 எப்படி இருக்கும்..?

தற்போதுள்ள iPhone 6s ன் தடிமன் 7.1 மில்லிமீட்டராக உள்ளது. புதிய iPhone 7ன் தடிமன், 6.1 மில்லிமீட்டராக இருக்கும் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன.

புதிய iPhone 7ன் வடிவம் பார்ப்பதற்கு அழகாக இருக்கலாம். ஆனால் பேட்டரியின் ஆயுட்கால அளவில் அவ்வளவாக மாற்றம் இருக்காது என்பது பரவலான கருத்து. iPhone 7, ஐந்து நிறங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாரான சில படங்கள் இனையத்தி உலா வருகின்றன..

iphone-7-concept-ciccarese

iphone-7-konc

புதுப்பிக்கப்பட்ட IPAD PRO 12.9

ஐப்பேட்டின் விற்பனைகள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. எனவே இன்றைய வெளியீட்டில் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படமாட்டாது என்று சிலர் நம்புகின்றனர்.

ஐப்பேட் தொடர்பான நிகழ்ச்சிகள் வழக்கமாக அக்டோபரில் வெளிவரும். ஆயினும், இன்றைய நிகழ்ச்சியில் அது வந்தாலும் வரலாம் என்கின்றனர் இன்னும் சிலர்.

xl_ipad-pro

Apple ஸ்மார்ட் வொச் 2

புதிய கடிகாரத்தின் வடிவம் மேலும் மெலிந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது இன்னும் வேகமாகச் செயல்படும் என்றும் GPS இருக்கும் என்றும் வதந்திகள் கூறுகின்றன. மற்றபடி பெரும் மாற்றங்கள், Apple கடிகாரத்திற்கான தனி நிகழ்ச்சிகளில்தான் வெளிவரும் என்ற கருத்தும் உள்ளது.

Apple-Watch-2-main

வரும் வரை காத்திருந்து தான் பார்ப்போமே…

No comments:

Post a Comment

Pages