iPhone 7 இதில் என்னதான் உள்ளது… - தமிழ் IT

Latest

Thursday, September 8, 2016

iPhone 7 இதில் என்னதான் உள்ளது…

14287609_1068520049870609_1621813944_n

உலகம் முழுவதும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் iPhone 7 மற்றும் 7 Plus அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில், பில்கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. 

நிகழ்ச்சி தொடங்கியவுடன் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ டிம் குக் கடந்த ஓராண்டில் ஆப்பிள் ஐபோன் சாதித்த விஷயங்களையும், ஆப்பிள் வாட்சின் புதிய பதிப்பான “சீரிஸ் 2”வையும் வெளியிட்டார். பின்பு உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள்iPhone 7 மற்றும் 7 Plus-ஐ வெளியிட்டார். தொடர்ந்து இந்தாண்டுக்கான ஐபோனை உருவாக்கிய குழுவில் இடம்பெற்ற சாப்ட்வேர் மற்றும் ஹார்ட்வர் இன்ஜினீயர்களையும், டிஸ்ப்ளே, ஸ்டோரேஜ், பாதுகாப்பு அம்சங்கள், சென்சார்கள், பேட்டரி, கேமரா போன்ற பல்வேறு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சிறப்பம்சங்களையும் விளக்கினார்கள். 

அதன்படி iPhone 7, 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $649வும், அதிகபட்ச மாடலின் விலை $849 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் முறையே சுமார் 43 ஆயிரம் மற்றும் 56 ஆயிரமாக இருக்கும். 

இதேபோல் iPhone 7 Plus மாடலும் 32 ஜிபி, 128 ஜிபி மற்றும் 256 ஜிபி ஆகிய வகைகளில் கிடைக்கிறது. இதன் குறைந்தபட்ச மாடலின் விலையாக $769வும், அதிகபட்ச மாடலின் விலை $969 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் முறையே சுமார் 51ஆயிரம் மற்றும் 64 ஆயிரமாக இருக்கும் 

iPhone மற்றும் iPhone Pius பல்வேறு சிறப்பம்சங்கள்: 

Display:


iPhone 7, 4.7” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடன் 3டி தொடுதிரை கொண்டது. இதன் தடிமன் 7.1 மி.மீ.
iPhone 7 Plus மாடல் 5.5” அங்குல ரெட்டினா எச்டி டிஸ்ப்ளேயுடனும் 3 டி தொடுதிரையுடனும் வெளிவந்துள்ளது. இதன் தடிமன் 7.3 மி.மீ ஆகும்

.

எடை:


iPhone 7 138 கிராம் எடையும்iPhone 7 Plus 188 கிராம் எடையும் கொண்டுள்ளது.

புரொச்சர்:


iPhone 7 மற்றும் 7 Plus ஆகிய இரண்டும் 4 ஜிபி ரேம் நினைவகத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிளின் பிரத்யேகமான “A10 பியூசின்”  சிப்கள் முதல் முறையாக இந்த இரண்டு மாடல்களிலும் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் இது 2.4GHz பிராசஸர் கொண்டுள்ளதால் அதிக அளவிலான ஆஃப்களை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும். அதே போன்று இந்த மேம்படுத்தப்பட்ட பிராசஸரின் காரணமாக கடந்த மாடல்களைவிட அதிகளவு சார்ஜ் நிற்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Camara:


iPhone 7 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது. iPhone 7 Plus அதிக தூரத்தில் உள்ளதை படம் பிடிக்கும் வகையில் இரண்டு 12 MP பின்பக்க கேமராவும் 7 MP HD  முன்பக்க செல்ஃபி கேமராவும் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட டிஎஸ்எல்ஆர் கேமராவிற்கு இணையான புகைப்படங்களை எடுக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 

பேட்டரி:


3G Network இல் 7எஸ் மாடலில் 14 மணி நேரமும், 7எஸ் Plus மாடலில் 21 மணி நேரமும் பயன்படுத்தும் வகையிலான பேட்டரியைக் கொண்டுள்ளது. இரண்டு மாடல்களிலுமே Nano Sim Card மட்டுமே பயன்படுத்த முடியும்.

apple2

நிறம்:


இந்த இரண்டு போன்களும் Silver, Gold, Rose Gold, Black மற்றும் Jet Black  ஆகிய நிறங்களில் கிடைக்கின்றன.

iPhone-7-second-780x413

சிறி:


Apple இன் பிரத்யேகமான சிறப்பம்சங்களில் ஒன்றான அதன் பர்சனல் வாய்ஸ் அசிஸ்டன்ட் சிறி இனி Linkedin, Facebook மற்றும் மற்ற நிறுவனங்களின் Appகளிலும் பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஆடியோ:


iPhone 7 மற்றும் 7 Plus-ல் முதல் முறையாக இரண்டு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்னரே எதிர்பார்த்தது போன்று ஹெட் போன் ஜாக் எடுக்கப்பட்டு வயர்லெஸ் ஆடியோவுக்கு முன்னுரிமை அளித்து, அதற்காக ஆப்பிள் புதிதாக வயர்லெஸ் “ஏர்பாட்ஸ்” என்னும் ஹெட் போனையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 900 மில்லியன் ஏர்பாட்ஸ்களை விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.

iphonee

வாட்டர் புரூப் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட்:


இரண்டு புதிய ஐபோன்களும் வாட்டர் ப்ரூப் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் போன்றவைகளுடன் வெளிவந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Waterproof

இந்த நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்பட்ட மற்ற சில முக்கிய தகவல்கள்:

1. ஆப் ஸ்டோருக்கு வந்தது சூப்பர் மேரியோ கேம்!
                          நம்மில் பல பேர் சிறு வயதில் விளையாடிய வீடியோ கேமில் மிகவும் பிரபலமானது சூப்பர் மேரியோ ஆகும். ஆனால் அதன் உண்மையான பதிப்பு இன்னும் ஸ்மார்ட்போனுக்கு வரவில்லை. எனவே “சூப்பர் மேரியோ ரன்” என்னும் பெயரில் ஆப்பிள் அதை மேலும் மேம்படுத்தி  தனது ஆப் ஸ்டோரில் வெளியிடப்போவதாக அறிவித்துள்ளது. 

2.  ஐஒர்க்:
                  ஒரே பள்ளி, கல்லூரி அல்லது அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் ஒரே சமயத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்தே தங்கள் நண்பர்களுடன் இணைந்து ஒரே அசைன்மெண்ட்டை  தங்களின் ஐபேட், மேக், ஐபோன் மற்றும் இணையத்தில் இருந்து செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3. ஆப்பிள் வாட்ச்:
                   ஆப்பிள் வாட்சின் புதிய பதிப்பான “சீரிஸ் 2” அறிமுகம் செய்யப்பட்டது. வாட்ச்ஓஎஸ் 3,  வாட்டர் புரூப், வாட்சிலேயே இணைக்கப்பட்ட ஜிபிஎஸ்ஸுடன் வெளிவரவுள்ள இதில் உலகம் முழுவதும் உள்ள ஸ்மார்ட்போன் பயனாளர்களை நடக்கவிட்ட விர்ச்சுவல் ரியாலிட்டி கேமான போக்கிமான் கோ ஆப்பிள் வாட்சில் விரைவில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் என்ன வேண்டும்..?

No comments:

Post a Comment

Pages