ரேன்சம்வேர்: 150 நாடுகளில் 2 லட்சம் கணனிகள் முடக்கம்

499983-ransomware-feature

கடந்த சில நாட்களாகவே ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு நிறுவனங்கள் இத்தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிவருகின்றன. இந்நிலையில் நேற்று சீனா மற்றும் ஆசிய நாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் உள்ள சர்வர்களை ரேன்சம்வேர் வைரஸ் தாக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒரே நாளில் 150 நாடுகளில் உள்ள 2 லட்சம் கம்ப்யூட்டர்களை ரேன்சம்வேர் வைரஸ் முடக்கியுள்ளது.

குறிப்பாக பள்ளிகள், கடைகள், மருத்துவமனைகள், இ-மெயில், நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள கம்ப்யூட்டர்களை குறி வைத்து இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

29,000 நிறுவனங்கள் பாதிப்பு

முதலில் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளில்தான் ரேன்சம்வேர் வைரஸ் தாக்கியது. அதன் பிறகு ரஷ்யாவில் உள்ள வங்கிகளை இந்த வைரஸ் தாக்கியது. தற்போது சீனா முழுவதும் 29,000 நிறுவனங் களில் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடந்திருப்பதாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வாரம் சனிக்கிழமை மாலை நேரத்தில் 29,372 நிறுவனங்கள் மீது ரேன்சம் வேர் சைபர் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாக ஜின்ஹூவா நியூஸ் ஏஜென்ஸி தகவல் தெரிவிக்கிறது. குறிப்பாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் இந்த சைபர் தாக்குதலால் அதிகம் பாதிக் கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இவை தவிர, ரயில்வே நிலையங் கள், கேஸ் நிலையம், அலுவலகங் கள், ஷாப்பிங் மால்கள், அரசு சேவைகள் ஆகியவற்றிலும் ரேன்சம்வேர் தாக்குதல் நடத்தப் பட்டுள்ளதாக ஜின்ஹூவா நியூஸ் ஏஜென்ஸி கூறியுள்ளது. சீனாவினுடைய பெட்ரோ கேஸ் நிலையங்களில் ரேன்சம்வேர் தாக்குதல் நடந்ததால் பயனாளிகள் தங்கள் டெபிட் கார்டை பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.

தென்கொரியா, ஆஸ்திரேலியா விலும் ரேன்சம்வேர் சைபர் தாக்குதல் நடந்துள்ளன. ஆஸ் திரேலியாவில் நடுத்தர நிறுவனங் களில் உள்ள கம்ப்யூட்டர்களில் ரேன்சம்வேர் தாக்கியுள்ளது. தென் கொரியாவில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒன்பது கம்ப்யூட் டர்களில் ரேன்சம்வேர் தாக்குதல் நடந்துள்ளாதாக தெரியவந்துள் ளது. ஆனால் எங்கெங்கு நடந்துள் ளன என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை. பிரிட்டனில் பல்வேறு மருத்துவமனைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஹாங்காங் பங்குச் சந்தை செய்தி தொடர்பாளர் கூறுகையில், ``தற்போது வரை அனைத்து கம்ப் யூட்டர்களும் எப்போதும் போல இயங்கி கொண்டிருக்கின்றன. இருந்தாலும் உயர் தொழில்நுட்ப ரீதியில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.

கம்ப்யூட்டரை ஆன் செய்தால் பிணைத் தொகை கொடுத்தால்தான் உங்கள் கம்ப்யூட்டர்கள் செயல் படும் என திரையில் தோன்றுவ தாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே இது சைபர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகி றது. இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.

தற்போது, குறைந்த வேகத்தி லேயே செயல்பட்டுவரும் ரேன்சம் வேர் தாக்குதல், விரைவில் புதிய அச்சுறுத்துல்களுடன் விரைந்து தாக்கும் என சைபர் செக்யூரிட்டி பாதுகாப்பு வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் தேசிய பாது காப்பு ஏஜென்சியால் உருவாக்கப் பட்ட சில ஹேக்கிங் மென்பொருட் கள் கடந்த ஏப்ரல் மாதம் ஆன் லைனில் வெளியாகி களவாடப் பட்டதே இத்தனை பிரச்சினைக்கும் காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மென்பொருள் வெளியானது குறித்து மைக்ரோ சாப்ட் நிறுவனம் அமெரிக்க அரசை குற்றம்சாட்டியுள்ளது.

ஆனால் பாதிக்கப்பட்ட கம்ப் யூட்டர்களில் பேக்அப் ஆப்ஷன்கள் இருப்பதால் விரைவாக இந்த தாக்குதலில் இருந்து மீளமுடிகிறது என்று ஸ்காட் பெர்க் நிறுவனத்தின் பொருளாதார நிபுணர் தெரிவித் துள்ளார்.

ரேன்சம்வேர் சைபர் தாக்குத லால் மில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு ஏற்படும் என லாபநோக்கில் லாத நிறூவனமான அமெரிக்க சைபர் ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது. ஆனால் இழப்பு 100 கோடி டாலருக்கு மேல் இருக்காது என்றும் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.