WhatsApp தரும் புதிய வசதி - தமிழ் IT

Friday, August 25, 2017

demo-image

WhatsApp தரும் புதிய வசதி

gsmarena_001

காலத்திற்கு காலம் தனது பயனர்களுக்கு புதிய புதிய வசதிகளை வழங்குவதில் WhatsApp என்றும் பின்னின்றதில்லை. அன்மையில் அறிமுகமான Photo Album முறை இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்ட வசதியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ஆனால் நாம் இன்று அதை பற்றி பேசவில்லை. WhatsApp அறிமுகம் செய்யும் இன்னுமொரு புதிய வசதி பற்றியே பார்க்கப் போகிறோம்.


அது தான் வாட்ஸ்அப் ஸ்டேடஸ் (Status), இதென்னடா பலச போய் புதுசா சொல்லப் போறான் என்று பாக்காதீங்க. இது அதுக்கும் மேல...

படங்களையும், வீடியோக்களையுமே நாம் Status ஆக பயன்படுத்தி வந்தோம். அது பாவனையாளர்களிடையே வரவேற்பைப் பெற்றாலும், அந்த படங்களும் வீடியோக்களும் Download ஆன பின்னரே பார்க்க முடியும். வீடியோக்கள் கூடுதலான Data வை சுரண்டுகின்றன போன்ற பல காரனங்களால் எதிர்பாக்கப்பட்ட வரவேற்பு கிடைக்கவில்லை. 
whatsapp_main_1503379863737

இவற்றை யோசிப்போருக்கும், வித்தியாசமாக Status பதிய ஆசைப் படுவோருக்குமாக அறிமுகமாகும் புதிய சேவையே Text Status. ஆரம்பத்தில் ஒருவகை Text Status வசதி வாட்ஸ்அப்பில் இருந்தது, அது உங்கள் Profile இல் வழங்கப்பட வேண்டும், என்றாலும் அது அடுத்தவரின் Contact List இல் உங்கள் பெயருக்கு கீழால் எழுத்துக்களால் காட்டப்படும், அவ்வளவு தான். ஆனால் புதிய Text Status படங்களையும் வீடியோக்களையும் Update செய்யும் இடத்திலேயே, ஒரு பேனா போன்ற Icon மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் உங்களுக்கு பிடித்த வரிகளை Type செய்ய முடிவதுடன், Facebook இல் போன்று Background Colour ஒன்றையும் கொடுக்க முடியும், மேலும் வித்தியாசமான சில எழுத்துருக்களுக்கும் மாற்ற முடியும். அதே போல வழமையான Similes ஐ இங்கும் பயன்படுத்த முடியும்.


இப்போதைக்கு Beta Version பயனர்களுக்கு வந்துள்ள இவ் வசதி, இன்னும் ஒரு சில நாட்களில் அல்லது வாரங்களில் அனைவருக்கும் கிடைக்கும். பொருத்திருந்து பாருங்கள், அதுவரை நாம் Test  பன்னிப் பார்ப்பம். 

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *