உச்சத்தில் WhatsApp | தினமும் 100 கோடி பேர்… - தமிழ் IT

Wednesday, August 30, 2017

demo-image

உச்சத்தில் WhatsApp | தினமும் 100 கோடி பேர்…

.com/-5ugXecg9Rno/Wa5NzSYvGBI/AAAAAAAANYo/uQFL6EhjBWA_FRZhmK6PQlA8IRwY0tLSQCHMYCw/

WhatsApp  செயலியை தினந்தோறும் 100 கோடி மக்கள் (1 பில்லியன் பேர்) தீவிரமாகப் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுக்க 100 கோடி பயனர்களைக் கொண்ட, மிகப்பெரிய குறுஞ்செய்தி நிறுவனம் WhatsApp . இச்செயலியை தினமும் 100 கோடி மக்கள் (1 பில்லியன் பேர்) தீவிரமாகப் பயன்படுத்தி வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அத்துடன் WhatsApp இல் தினந்தோறும் 55 பில்லியன் குறுஞ்செய்திகள் பகிரப்பட்டு வருவதாகவும், 100 கோடி வீடியோக்கள் பகிர்ந்துகொள்ளப்படுவதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

WhatsApp ஐ மாதந்தோறும் 130 கோடி மக்கள் பயன்படுத்துவதாகவும், 60 மொழிகளில் WhatsApp இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் நாள்தோறும் 450 கோடி படங்கள் உலகம் முழுக்கப் பகிரப்படுகின்றன.

2014-ல் சுமார் 21.8 பில்லியன் டாலர்கள் கொடுத்து WhatsApp ஐ விலைக்கு வாங்கியது Facebook. அதைத் தொடர்ந்து WhatsApp இல் தொடர்ந்து மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Video Calling, 24 மணி நேரத்தில் மறைந்துவிடும் படம் அல்லது எழுத்திலான  ஸ்டேட்டஸ் வசதி, செயலி மறு வடிவமைப்பு, பாதுகாப்பு ஆகிய வசதிகள் காரணமாக WhatsApp பயனர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

.com/-PMHl63_ej9E/Wa_9ut7IMAI/AAAAAAAANac/X-_L6FsPjcYaxa_I8vcKlFTruCuhXJW8ACHMYCw/

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *