எச்சரிக்கை : Android சாதனங்கள் மீதான சைபர் தாக்குதல், என்ன செய்யலாம்? - தமிழ் IT

Latest

Tuesday, October 24, 2017

எச்சரிக்கை : Android சாதனங்கள் மீதான சைபர் தாக்குதல், என்ன செய்யலாம்?

கடந்த சில காலத்துக்கு முன்னர் உலகில் பல கணனிகளை தாக்கிய சைபர் தாக்குதல் தான் Ransomware. இதனால் உலகில் பல்லாயிரக் கணக்கான கணனிகளும் தரவுகளும் முடங்கின. பின்னர் இவற்றை விடுவிப்பதற்காக கப்பம் கோறப்பட்டது. இருந்த போதிலும் இந்த கப்பத் தொகை செலுத்தப்பட்ட சிலருக்கு தாம் இழந்த தரவுகல் மீளக் கிடைக்கவில்லை என்பதும் முன்னர் நடந்த விடயம்.

இப்போது இதே வகையான ஒரு Ransomware தாக்குதலொன்று Android சாதனங்கள் மீது நடாத்தப் படுகிறது. அதனை Double Locker என அறியப்படுகிறது. இதிலும் உங்கள் முக்கிய ஆவனங்கள் Encrypt செய்யப்பட்டு முடக்கப்படும். பின்னர் இவற்றை மீட்பதற்காக உங்களிடம் கப்பம் க்கொறப்படுகின்றது.

எப்படி எமது Android சாதனத்துக்குள் Double Locker வருகிறது..?


இன்று கைபேசிகளை பாவிக்கும் நம்மில் பலர் புது App களை பயன்படுத்திப் பார்ப்பதை சர்வ சாதாரனமாக செய்கிறோம். Play Store இல் இருந்து ஏதாவது ஒரு App ஐ Install செய்வதானாலும் அதில் கேற்கப்படும் Permission பற்றி எந்த கவலையும் இல்லாமல் Permission ஐ வழங்கி Install செய்துகொள்கிறோம். இந்த பலக்கம் தான் நம்மை ஆபத்தில் மாட்டி விடுகின்றது. அடுத்த வியம் தான் Play Store அல்லாத் வேறு இடங்களில் இருந்து Download செய்து பயன் படுத்துன் App கள். 

இன்னொரு முக்கிய முறையும் இதற்காக Hacker களால் பயன்படுத்தப்படுகின்றது. அதாவது நீங்கள் உங்கள் Browser இல் ஏதாவது வீடியோவை பார்க்க முயற்சிக்கும் போது, இதற்கு  Flash Player தேவைப்படுகிறது. கீழே உள்ள Link மூலம் Install செய்துகொள்ளுங்கள் என அறிவித்தல் வரும். நாமும் வீடியோவை பார்க்கும் ஆர்வத்தில் கண்னை மூடிக்கொண்டு உள்ள Permission அனைத்திக்கும் ஆமாம் சொல்லி Install செய்துகொள்வோம்.


அவ்வளவு தான், அசாமி உள்ளே வந்து விடுவார்.

எப்படி தவிர்கலாம்..


சாதாரன விடயம் தான், கண்ட இடங்களில் இருந்து வரும் App களை எல்லம் Install செய்யாது, Play Store இல் உள்ள App களை பயன்படுத்த வேண்டும். அத்தோடு, Play Store இல் இருந்து Install செய்யும் போதும் கேற்கப்படும் Permission களளை சற்று அவதானமாக பார்த்து Accept செய்ய மேண்டும். Install செய்யப்பட்ட App களையும் Google Play Protect சேவையால் அடிக்கடி Scan செய்யப்படுவதால், Google Play Protect வழங்கும் அறிவித்தல்கள் பற்றி அவதானமாக இருத்தல் வேண்டும்.

Double Locker நுழைந்தால் என்ன செய்யலாம்...?


ஒரே வழிதான் உள்ளது, அது தான் உங்கள் Mobile ஐ Factory Reset  செய்ய வேண்டும். ஆனால் இதன் போது உங்கள் கைபேசியில் உள்ள Contacts அனைத்து தரவுகளும் அழிந்துவிடும். புதிதாக வாங்கிய கைபேசி போல ஆகிவிடுகின்றது.

உங்கள் தரவுகளை பாதுக்காக்க முன்னேற்பாடாக எப்போதும் ஒரு Backup ஐ வைத்துக்கொள்ளுங்கல். Phone இல் உள்ள போட்டொக்கள், வீடியோக்களை கணகிக்கோ அல்லது ஏதாவது சாதனத்திற்கோ மாற்றி வையுங்கள்.

இவை எல்லவற்றையும் விட நல்ல வழியை Google உங்களுக்கு தந்துள்ளது. ஆனால் அனேகர் அதை பாவிப்பதில்லை. அதாவது உங்கள் Contact அனைத்தையும் உங்கள் Google கணக்கிற்கு மாற்றிக்கொள்ள முடியும், அத்தோடு உங்கள் Gallery ஐ Google Photos உடன் Sync செய்து கொள்ள முடியும். இதன் போது இவை உங்கள் Google Drive இல் பாதுகாப்பாக இருக்கும்.  

இது பற்றி ESET ஆய்வாளர்கள் வழங்கும் வீடியோ பதிவு கீழே


No comments:

Post a Comment

Pages