WhatsApp தரும் புதிய வசதி - Voice Record Lock - தமிழ் IT

Latest

Friday, April 6, 2018

WhatsApp தரும் புதிய வசதி - Voice Record Lock

காலத்திற்குக் காலம் புதிய வசதிகளை தன் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில் WhatsApp பின்னின்றதில்லை. அன்மையில் Group களுக்கு Description இடும் வசதியையும் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

ஆம், இம்முறை WhatsApp என்ன தரப் போகின்றது என்று பார்ப்போம், அது தான் Voice Record Lock வசதி. Voice Record Lock என்றால் நாம் வாட்ஸ் அப்பில் Voice Record செய்யும் போது MIC ஐக்கன் ஐ அழுத்திப் பிடித்த வன்னமே Record செய்ய வேண்டும். ஆனால் புதிய Voice Record Lock வசதி மூலம் MIC ஐக்கன் ஐ அழுத்தி Recording ஐ ஆரம்பித்த பின்னர் மேல் பக்கத்திற்கு அம்பு குறியுடன் ஒரு Lock  காட்சியளிக்கும், இப்போது அழுத்திய விரலை மேல் பக்கமாக இழுத்து அந்த Lock இன் மீது சென்ற பின் விரலை விட வேண்டியது தான், உங்கள் Voice Record அதன் பாட்டில் Record ஆகிக்கொண்டிருக்கும். கடைசியில் Send செய்ய வேண்டியது தான்.

தற்போது இவ்வசதி WhatsApp (Beta) பதிப்பை பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. வெகு விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இவ் வசதியை பயன்படுத்த சந்தர்ப்பம் கிடைக்கும்.
ஆனால் இந்த வசதியை முதலில் வழங்கும் Messaging சேவை WhatsApp அல்ல என்பது தான் உண்மை. இந்த வசதியை ஏற்கனவே Telegram சேவை வழங்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment

Pages