மீண்டும் களத்தில் Pay Here - தமிழ் IT

Latest

Saturday, October 7, 2017

மீண்டும் களத்தில் Pay Here



உலகளவில் வளர்ந்து வரும் இணைய வணிகத்திற்கு ஏற்றாற் போல இலங்கையில் இணையம் சார்ந்த கொடுக்கல் வாங்கல்கள் வளர்ச்சியடைந்து வந்தூள்ளது. என்றாலும் பணப் பரிமாற்றத்திற்கான IPG (Internet Payment Gateway) களின் பங்களிப்பு மிக குறைவாகவே இருந்தது. இந்த குறைகளை நீக்கும் வகையில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் ஒரு சில IPG கள் களத்தில் குதித்தன. அவற்றில் அனேகரின் வரவேற்பைப் பெற்ற IPG தான் Pay Here எனும் சேவை. எவ்வித பதிவுக் கட்டனமும் இல்லாமல் சேவை வழங்கப்பட்டதோடு, கொடுக்கல் வாங்கல்களின் போது ஒரு சிறு தொகை கட்டணமாக அரவிடப்பட்டது.


என்றாலும் இலங்கை மத்தியவங்கியினாலும், அரசாங்கத்தினதும் சில சட்ட ஒழுங்கமைப்பு நடவடிக்கைகலினால் வங்கிகள் மூலம் உத்தியோகபூர்வமாக வழங்கப்படாத அவைத்து IPG சேவைகளும் இடைநிறுத்தப்பட்டன. இதனா Payhere உள்ளிட்ட அனைத்துது வங்கி சாரா சேவைகளும் தமது சேவைகளை நிறுத்திக்கொண்டன.

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் மீண்டும் இலங்கை மத்திய வங்கி வங்கி சாரா IPG களுக்கு சட்ட ரீதியாக இயங்க அங்கீகாரம் வழங்க முன்வந்துள்ளது. இதன் முதல் கட்டமாக அனேகரின் வரவேற்பைப் பெற்ற PayHere சேவைக்கு முதலாவதாக மத்திய வங்கி அங்காரம் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பை Payhere இன் உத்தியோகபூர்வ Facebook பக்கம் நேற்றைய தினம் அறிவித்தது. அந்த வகையில் PayHere இலங்கை மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட முதலாவது வங்கி சாரா IPG சேவையாக பரினமிக்கின்றது.

மிக விரைவில் தமது சேவையை வழங்க தாம் தாயாராவதாக அறிவித்துள்ள Payhere, பழைய அதே கட்டன முறையில் மக்களுக்கு சேவைகளை வழங்கு என்பதே இப்போதைக்கு உள்ள கேள்வி. என்றாலும், அவர்களின் முகப்புத்தகத்தில் உள்ள தகவலை பார்க்கும் போது கட்டண மாற்றங்களுக்கான சாத்தியம் இருப்பதாகவே தோன்றுகின்றது. என்றாளும் பெரிய அளவிலான அறவீடுகள் இடம்பெறாது என்ற ஒரு சிறு நம்பிக்கை இருக்கின்றது.


கொஞ்சம் பொறுத்துத் தான்பார்ப்போமே...


PayHere தொடர்பான எமது முன்னைய பதிவு

No comments:

Post a Comment

Pages