தாய்வான் வங்கி மீதான Cyber கொள்ளை - தமிழ் IT

Latest

Wednesday, October 11, 2017

தாய்வான் வங்கி மீதான Cyber கொள்ளை



கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மிக பரபரப்பன ஒரு சர்வதேச வங்கிக் கொள்ளை நடைபெற்றது. அது தான் தாய்வானில் உள்ள ஃபா ஈஸ்டன் சர்வதேச வங்கி (Far Eastern International Bank) இன் வலையமைப்பு மீது மேற்கொள்ளப்பட்ட ஹெக்கர் தாக்குதல். இந்த சைபர் தாக்குதலில் குறித்த வங்கியிலிருந்து 60 மில்லியன் அமேரிக்க டொலர்கள் Slip Transfer ஊடாக பரிமாற்றப்பட்டுள்ளது. இந்த கொடுக்கல் வாங்களின் பிரதான சூத்திரதாரியான இலங்கை அரசுக்கு சொந்தமான பிரபல எரிவாயு நிறுவனத்தின் பணிப்பாளர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார்.

இந்த சைபர் கொள்ளையானது மிகநுனுக்கமான முறையில் மெற்கொள்ளப்பட்டுள்ளது. இந் கொள்ளையில் குறித்த இலங்கை நிறுவனத்தின் பணிப்பாளரும், முன்னால் இரானுவ அதிகாரியொருவரின் மகனும், மேலும் இரண்டு இந்தியர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.

தாய்வானின் Far Eastern International Bank வலையமைப்புக்குள் நுழைந்த Hacker கள் அதனூடாக அமேரிக்காவின் City Bank இன் வலையப்பினுல் நுழைந்து அதிலிருந்து 60 மில்லியன் அமேரிக்க டாலர்களை தாய்வானின் Far Eastern International Bank இற்கு மாற்றி, அந்த தொகையை இலங்கை வங்கி (Bank of Ceylon) கணக்கொன்றிற்கு மாற்றப்பட்டுள்ளது. 

குறித்த கொடுக்கல் வாங்களின் ஒவ்வொருவருக்குமான பங்குகள் மூன்று நாட்களுக்கு முன்னர் கொழும்பில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலொன்றில் குறித்த தரப்பினரிடையே பிரித்துக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சந்திப்பிற்காக இந்தியாவை சேர்ந்த Hacker கள் இருவரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

பங்கு பிரிக்கப்பட்டதன் பின்னர் முன்னல் இரானுவ அதுகாரியின் மகன் Bank of Ceylon இல் இருந்து பெரிய அளவில் பணத்தை மீளப் பெற்றுள்ளார். இது தொடர்பாக வங்கியில் வினவப்பட்ட போது. ஒரு வியாபார நடவடிக்கையொன்றிற்காக வந்த பணம் என கூறியுள்ளார். பின்னர் இரண்டாவது தடவை பனம் பெறுவதற்காக அவர் வங்கிக்கு செல்வதற்கிடையில் அமேரிக்காவிலிருந்து இந்த கொள்ளை தொடர்பில் Bank of Ceylon அறிவுறுத்தப்பட்டிருந்தது. எனவே உடனடியாக முதல் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். பின்னர் அடுத்த சந்தேக நபரும் முக்கிய சூத்திரதாரியுமான எரிவாயு நிறுவன பணிப்பாளர் சட்டத்தரனியொருவரூடாக சரனடைந்தார்.

பிந்திய செய்திகளின் படி இந்த கொள்ளை தொடர்பான விசாரனை நடவடிக்கைகளுக்காக தாய்வானின் Far Eastern International வங்கியின் நிபுனர்கள் குழுவொன்றும், புலனாய்வுத் துறை அதிகாரிகளுக் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக அறியக் கிடைக்கிறது.

No comments:

Post a Comment

Pages