இலங்கை ரயில் பயனிகளுக்கு அருமையான App - தமிழ் IT

Tuesday, July 24, 2018

demo-image

இலங்கை ரயில் பயனிகளுக்கு அருமையான App


36568287_477714512676618_7935510360683970560_o
இலங்கையை பொருத்தமட்டில் அரச ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் என்று வேறுபாடின்றி நாளாந்த போக்குவரத்திற்காக பயன்படும் மிக முக்கிய வாகனம் ரயில் என்றால்  மிகையிலை. முக்கியமாக தலைநகருக்கும், அதனை அண்டிய நகரங்களுக்கு தொழிலுக்காக செல்வோரின் முக்கிய சேவையாக இது இருந்தாலும் பலருக்கும் ரயில் சேவை சில நேரங்களில் பெரிய தலையிடியாகவும் மாறுவதுண்டு.

ரயில் நேரசூசியை பார்ப்பதற்கும் தேடுவதற்கு ஏராலமான Mobile App கள் இருந்தாலும் அவை நேரத்தை காட்டும் வேளையை மாத்திரமே செய்தன. மாறாக ரயில் தாமதமாவதையோ, இரத்துச் செய்யப்பட்டதையோ, வேறு இடைஞ்சல்கள், வேறு செய்திகளை அதனால் பெற முடியாது. சிலவேலை App இல் நேரம் பார்த்து சென்ற பயனிகள் பலத்த அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.

என்றாலும், இதற்கான தீர்வொன்றை பெற்றுக்கொள்வது அந்த அளவு இலகுவானதல்ல என்பதே உன்மை. சில நாடுகளில் GPS தொழிநுட்பத்துடன் கூடிய ரயில்கள் மூலம், நவீன தொழிநுட்ப முறைகளில் இவை கையாலப்பட்டாலும் இலங்கையில் ரயில் சேவை தொழிநுட்ப ரீதியில் அந்த அளவு வளர்ச்சியடையாததால் அது சாத்தியமற்றதாகவே உள்ளது.



இந்த அசாத்தியங்களை சவாலகா எடுத்து அவற்றை இன்னொரு முறையில் சாத்தியப்படுத்தியதன் கதையாகவே இந்த Mobile App ஐ கூற முடியும். அரச ரயில் பயனிகளின் சமூகம் (රජයේ දුම්රිය මගින්ගේ නිල සමූහය) RDMNS எனும் குழுவினரே இதனை சாத்தியப்படுத்தியுள்ளனர்.



அதாவது ரயிலில் பயனிக்கும் பயனிகளுக்காக சேவை நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு Facebook குழுமம். இதைல் இப்போதைக்கு 53,000 இற்கு மேற்பட்டோர் அங்கத்தவர்களாக உள்ளனர். அவ்வப்போது ஏற்படும் தடங்கல்கல் தொடர்பில் குழுவில் செய்திகளை பரிமாறிக்கொள்ள ஆரம்பிக்கப்பட்டதே இக் குழுமம். என்ராலும் இன்று இக் குழு ஒரு பாரிய சக்தியாக வளர்ந்து வருகின்றதோடு மாத்திரமல்லாமல் பல நலன்புரி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.


இவர்களின் இத்தகைய முயற்சிகளில் முக்கிய மைல் கல்லே இந்த RDMNS.lk Mobile App. ரயில் சேவையின் தாமதம், தடங்கல்கள், சேவை இரத்து செய்யப்படும் செய்திகள் போன்ற அவசர தகவல்கள் போலவே ரயில் சேவையோடு தொடர்புடைய செய்திகளையும் உடனுக்குடன் அறியத்தருகின்றது இந்த Mobile App. நாடு பூராகவும் பயனிக்கின்ற பயனிகளிடமிருந்து கிடைக்கின்ற தகவல்களை ரயில்வே தினைக்கலத்துடன் இனைந்து சரிபார்த்து உடனடியாக இந்த App மூலம் அறிவிப்பு செய்யப்படுகிறது.

அறிமுகமாகி சில காலத்திற்குள் மக்கள் மத்தியில் வேகமாக பிரபல்யமடைந்து வரும் இந்த Mobile App காலப் போக்கில் இன்னும் பல வசதிகளையும் இத்தோடு இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறுகின்றது. அதே போல இதன் User Interface மிக அழகாகவும், பார்ப்பொரை கவரும் விதத்திலும் அமைக்கப்பட்டுள்ளமை உன்மையிலேய பாராட்டத் தக்கது.

நல்ல முயற்சிகள் தொடரட்டும்...

app-store-android-download

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *