Messages; SMS மற்றும் MMS களை கணனியிலிருந்து அனுப்பலாம் - தமிழ் IT

Tuesday, July 24, 2018

demo-image

Messages; SMS மற்றும் MMS களை கணனியிலிருந்து அனுப்பலாம்

android-messages-on-pc-640x360
WhatsApp Web /  Viber PC Version போன்றவற்றை பயன்படுத்திய பலருக்கும் வந்த ஆசை தான் கைபேசியின் SMS களையும் இப்படி கணனியிலிருந்து அனுப்ப முடிந்தால் எப்படி என்று. நீண்ட தகவல்களை எழுதுவதற்கு, இலகுவாக Type செய்வதற்கு, கணனியில் வேளை செய்யும் போது அங்கிருந்தே கைபேசியியை கையாள்வதற்கு என இவ்வசதி பெரிதும் உதவும்.

இதற்கென பல மூன்றாம் நிலை மென்பொருள்கள் Play Store இல் இல்லாமல் இல்லை. என்றாலும் அவை எமது SMS செயலியின் முழுமையான வேளைகளை செய்துகொள்வதற்கு போதுமானதாக இருக்கவில்லை. சில கை பேசிகளில் அவை ஒழுங்காக வேளை செய்யவில்லை.

இந்த குறைகளுக்கு சரியான பதிலாக Android இன் பிரப்பிடமான Google அதன் SMS மற்றும் MMS செயலியான Messages செயலியின் புதிய பதிப்பில் Web Browser ஊடாக எமது கைபேசியின் SMS செயலியை இயக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. Messages செயலியின் எல்லா வசதிகளையும் பயன்படுத்தக்கூடிய வகையில் மிக அருமையாக இச்சேவை வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஏனைய இதனையொத்த செயலிகளால் செய்ய முடியாத இரட்டை சிம் (Dual SIM) போன்களுக்கான SMS / MMS முறைமையை வெற்றிகரமாக செயற்படுத்தியுள்ளது.

உங்கள் கைபேசியின் Messages செயலியில் Settings இல் Messages for Web என்பதைத் தெரிவு செய்து, உங்கள் Browser இல் messages.android.com எனும் இணையத் தளத்திற்கு சென்று, அங்கு வரும் QR Code ஐ உங்கள் மொபைலால் Scan செய்தால் போது. உங்கள் மொபைலில் உள்ள அபைத்து SMS மற்றும் MMS களையும் கணனியில் காட்டிவதோடு. செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியும்.

இனி என்ன பயன்படுத்தியே பாருங்கள்...

en_badge_web_generic

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *