பெல்மண்ட் ஸ்மர்ட் சிடி (Belmont Smart City), உலகின் முதல் ஸ்மார்ட் நகரம் - தமிழ் IT

Friday, June 22, 2018

demo-image

பெல்மண்ட் ஸ்மர்ட் சிடி (Belmont Smart City), உலகின் முதல் ஸ்மார்ட் நகரம்


z7u5jdp0d5zbthhjh1ts


பில்லியன்கணக்கான டாலர்களை உங்கள் பையில் வைத்திருந்தால் என்ன செய்வீர்கள்? ஒருவேளை, நீங்கள் எதிர்காலத்தின் சொந்த நகரத்தை உருவாக்குவது பற்றி யோசிக்கலாம். அப்படி யோசிக்கிறார் நம்ம பில் கேட்ஸ்.


பில் கேட்சின் முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றான பெல்மோன்ட் பார்ட்னர்ஸ் (Belmont Partners),  சொல்லும் தகவலின் அடிப்படையில் 25,000 ஏக்கர் பரப்பளவில் பாரிய ஒரு நிலப்பரப்பை வாங்குவதற்காக 80 மில்லியன் டாலர்களை இந் நிறூவனம் செலவிட்டிருக்கிறது. இது அமேரிக்காவின் டோனோபா அருகிலுள்ள டவுன்டவுன் பியோனிக்ஸ் (Downtown Pheonix)  நகருக்கு அருகில் அமைந்துள்ளது.

மனிதன் இன்று அறிந்து வைத்துள்ள தொழிநுட்பங்கள் ஏராலம் உள்ளன. என்றாலும் அவை சில குறிப்பிட்ட வேளைகளுக்காகவே பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் அவை அனைத்தையும் மனிதர்களின் நாலனுக்காக ஒரே இடத்தில் பயன்படுத்தப் படுவதில்லை. இத்த வேளையை செய்வதற்கே பில் கேட்ஸ் தயாராகிறார். அதாவது இன்று இருக்கும் அனைத்து தொழிநுட்பங்களையும் ஒன்று சேர்த்து அதன் மூலம் ஒரு ஸ்மார்ட் நகரத்தை உருவாக்குவதே இந்த திட்டமாகும்.

buckeye
பெல்மோன்ட் பார்ட்னர்ஸ் (Belmont Partners) முதலீடு செய்துள்ள பாரிய நிலப்பகுதியை பெல்மண்ட் சிட்டி (Belmont City) என்று அழைக்கப்படும் எதிர்கால ஸ்மார்ட் நகரமாக மாற்றுவதே இந்த திட்டம். இந்த ஸ்மார்ட் நகரத்தில் வணிக நடவடிக்கைகளுக்காக 3,800 ஏக்கர் நிலமும் கல்வி / பாடசாலைகளுக்காக 470 நிலப்பரப்பும் ஒதுக்கப்படவுள்ளதோடு, சுமார் 80,000 வீடுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந் நகரத்தின் சனத்தொகை 182000 அளவில் இருக்கும் என கூறப்படுகிறது.

இந் நகரில் உலகில் பயன்படுத்தப்படக்கூடிய அதி உயர் தொழிநுட்பங்களை பயன்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. உலகின் அதி வேகமான இணைய சேவையை இங்கு தாபிக்கவும் உத்தேசித்துள்ளனர். அது இதுவரை எவரும் பயனபடத்தியோ / பயன்படுத்த எத்தனித்தோ இல்லாதா வேகமாக இருக்கும் என கூறப்படுகிறது. முழு நகரமும் சூரிய சக்தி, காற்றாடி மின் போன்ற இயன்றகை மின் உற்பத்தி மூலமே இயங்கவுள்ளது. சூழல் மாசடைவதற்கான எந்த சாத்தியமும் இங்கு இருக்காது என கூறப்படுகிறது. நகரினுல் போக்குவர்த்துக்காக தானியக்க (சாரதிகளற்ற) வாகனங்களே பயன்படுத்தப்படவுள்ளது. வீதிகள் அதி உயர் தொழிநுட்பங்கள் மூலம் பராமரிக்கப்படவுள்ளன.

மைக்ரோசாப்ட் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான 63 வயது ​​பில் கேட்ஸ், சமீபத்தில் உலகின் மிகப்பெரிய செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தைத் தவறவிட்டார், என்றாலும் உலகில் வித்தியாசமான கற்பணைத் திறனில் அவர் முத்லிடத்திலேயே இருக்கிறார் என்றால் மிகையாகாது.


No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *