கணனியில் சாதனை செய்ய வரும் ஹெலகுரு (හෙලකුරු) - தமிழ் IT

Friday, November 2, 2018

demo-image

கணனியில் சாதனை செய்ய வரும் ஹெலகுரு (හෙලකුරු)

44962481_1843154962399966_423487284373880832_n
இலங்கையில் கணனித் துறையில் தொடர்ந்து சாதனைகளை செய்துவரும் பாஷா (Bhasha) குழுவினரின் சிங்கள மொழி தட்டச்சுக்காக கைபேசிகளில் அரிமுகம் செய்யப்பட்ட ஹெலகுரு (හෙලකුරු) கீ போட் வெலி வந்ததிலிருந்து பலத்த வரவேபை பெற்றது நீங்கள் அறிவீர்கள். அது தொடர்பில் எமது தளத்திலும் நாம் பதிந்திருந்ததை பார்த்திருப்பீர்கள்.

அதன் கணனிகளுக்கான பதிப்பை இணைய உலாவியினூடாக மட்டும் வழங்கிய பாஷா (Bhasha) நிறுவனம் முழுமையான கணைனிப் பதிப்பாக இன்று கொழும்பு பண்டாரனாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமான (BMICH) இன்ஃபோ டெல் (INFOTEL) கண்காட்சியில் හෙළකුරේ පූර්ණ පරිගණකාගමනය எனும் அடைமொழியுடன் சற்று முன் வெளியிட்டது.

மிக அருமையாக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மென்பொருள் கணனியின் உள்ளீட்டு மொழியாக சிங்கள மொழியை தானாகவே நிறுவுவதுடன், விஜேசேகர (Vijesekara) மற்றும் Ponetic ஆகிய இரு முறைகளிலும் தட்டச்சு செய்யும் சந்தர்ப்பத்தை ஒரே முறையில் வழங்குகிறது.

மேலும் இதற்கு முன் வெளியான இத்தகைய மென்பொருட்களின் குரைகளை நிவர்த்தி செய்யும் வகையில் தட்டச்சு செய்யும் போது ஏற்படக்கூடிய ஏராலமான சிக்கல்கள் நிவர்த்து செய்யப்பட்டு வெளியாகியுள்ளமை அனேகரின் வரவேட்பைப் பெறும் என நம்பலாம்.

Windows, Mac, Linux ஆகிய அனைத்து இயங்குதளங்களுக்கும் ஒரே நேரத்தில் மென்பொருளை வெளியிட்டுள்ளதோடு தனிப்பட்ட பாவனைக்காக இந்த ஹெலகுரு மென்பொருல் இலவசமாகவே வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இது மட்டுமன்றி பல அருமையான சேவைகளையும் வழங்குவதில் பாஷா (Bhasha)  குழுவினர் முன்னனியில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கதுநம்மூர் படைப்பு என்பதால் பாராட்டியே ஆக வேண்டும்...

No comments:

Post a Comment

Pages

Contact Form

Name

Email *

Message *