தமது நிறுவத்தினால் இனிவரும் காலங்களில் அறிமுகம் செய்யப்படும் ஸ்மார்ட் கைப்பேசிகளில் கூகுளின் அப்பிளிக்கேஷன்கள் எதனையும் பயன்படுத்த முடியாது என ஹுவாவி நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜுன் மாதம் முதல் அமெரிக்காவின் வியாபாரக் கறுப்பு பட்டியலில் இடம்பெற்றுவருகின்றது ஹுவாவி நிறுவனம்.
இதனை அடுத்து அமெரிக்க நிறுவனங்கள் பலவும் ஹுவாவியுடனான உறவுகளை முறித்துக்கொண்டன.
அதேபோன்றே கூகுள் நிறுவனமும் ஹுவாவி நிறுவனத்தின் கைப்பேசிகளுக்கு வழங்கிவந்த அன்ரோயிட் இயங்குதளத்தின் அப்டேட்டினை நிறுத்தியிருந்தது.
இதனை அடுத்து ஹுவாவி நிறுவனம் தான் சொந்தமாக இயங்குதளத்தினை வடிவமைத்துள்ளது.
அடுத்து அறிமுகம் செய்யவுள்ள கைப்பேசிகளில் இப்புதிய இயங்குதளமே பயன்படுத்தவுள்ள நிலையில் கூகுளின் கூகுள் மேப், யூடியூப் உட்பட எந்த அப்பிளிக்கேஷனையும் பயன்படுத்த முடியாது என அதிரடியாக அறிவித்துள்ளது.
எனினும் கூகுளின் அப்பிளிக்கேஷன்கள் இன்றி வெளியாகும் ஹுவாவி நிறுவத்தின் கைப்பேசிகள் விற்பனையில் சரிவை எதிர்நோக்கும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment