ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 சாதனத்தின் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.அந்த நிறுவனம் வாட்ச் சீரிஸ் 4 மாடலை எட்ஜ்-டு-எட்ஜ் வளைந்த டிள்ப்ளேவுடன் அறிமுகம் செய்தது. இதில் ஃபால் டிடெக்ஞ்சன் வசதி வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடல்களை புதிய 2019 ஐபோன் மாடல்களுடன் அறிமுகம் செய்ய ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இத்துடன் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 5 மாடலில் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்படுகிறது. OLED டிஸ்ப்ளே மற்றும் டச் மாட்யூல் உள்ளிட்டவை இருக்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து ஜப்பான் டிஸ்ப்ளே இன்க் நிறுவனத்திடம் இருந்து OLED டிஸ்ப்ளேக்களை வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
No comments:
Post a Comment