Schedule Message; டெலிகிராம் தரும் புதிய வசதி - தமிழ் IT

Latest

Monday, September 9, 2019

Schedule Message; டெலிகிராம் தரும் புதிய வசதி

 WhatsApp க்கு போட்டியாக ஒரு செயலையாக 4 அல்ல்து 5 வருடங்களுக்கு முன்னர் கேட்டிருந்தால் நாம் Viber என்றே சொல்லியிருப்போம். ஆனால் இன்று நிலமை மாறிவிட்டது. WhatsApp தனது நிலையை விட்டுக் கொடுக்கவில்லை என்றாலும் அதன் பிரதான போட்டியாலர் மாறிவிட்டது. அது நாமெல்லாம் பயன்படுத்தும் Telegram செயலி.

ஆரம்பத்திலேயே அசத்தலான வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட Telegram புதிய வசதிகளை பயனர்களுக்கு வழங்குவதில் WhatsApp ஐயே விஞ்ஜி விட்டது எனலாம். எதிர்பாரார வசதிகளை எதிர்பாராத வித்தில் வழங்குவது Telegrame க்கே உரிய தனித் தனமை ஆகிவிட்டது.

ஆம் அது மாதிரியான அசத்தலான அடுத்த வசதி தான் Schedule Message, அதாவது எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய ஒரு தகவலை முன்கூட்டியே தயார்படுத்தி வைத்து, உரிய நேரத்தில் தானாக அனுப்பும் வசதி. இவ் வசதி நேற்றிலிருந்து அனைத்து Telegram  செயலிகளிளும் உத்தியோகபூர்வமாக அறிமுகமாகியுள்லது.

நீங்கள் செய்ய வேண்டியது தகவலை அனுப்பு முன் Send ஐக்கன் மீது சிறிது நேரம் தொட்டுக்கொண்டு இருப்பது தான், அப்போது Schedule என po-up தோன்றும், பின்னர் என்ன உங்களுக்கு விருப்பமான தினத்தை, நேரத்தை குறிப்பிட்டு வைக்க வேண்டியது தான். மீதி வேளையை Telegram பார்த்துக்கொள்ளும்.

No comments:

Post a Comment

Pages