Threads: 7 நிமிடத்தில் 10 மில்லியன் பயனர்களைப் பெற்ற 'Threads' செயலி; ட்விட்டரின் நிலை என்னவாகும்? - தமிழ் IT

Latest

Sunday, July 9, 2023

Threads: 7 நிமிடத்தில் 10 மில்லியன் பயனர்களைப் பெற்ற 'Threads' செயலி; ட்விட்டரின் நிலை என்னவாகும்?



Twitter vs Threads: ட்விட்டருக்குப் போட்டியாக மெட்டாவின் 'Threads' செயலி 7 நிமிடத்தில் 10 மில்லியன் பயனர்களைப் பெற்றுள்ளது. எலான் மஸ்க் இது குறித்து கிண்டலாக மீம் ஒன்றை ரீ-ட்வீட் செய்துள்ளார்!

ட்விட்டருக்குப் போட்டியாக மெட்டா நிறுவனம் 'Threads' என்ற செயலியை இன்று அறிமுகம் செய்துள்ளது. நீண்ட நாட்களாகவே டெவலப்பிங்கில் இருந்த இந்த செயலி இன்று 'ios' மற்றும் 'Android' என இரு தளங்களிலும் வெளியாகியுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாகிராமின் அக்கவுன்ட் மூலம் எளிதாக மெட்டா நிறுவனத்தின் இந்தப் புதிய 'Threads' செயலியில் இணைந்து விடாலம். இதனால், ஏழு நிமிடங்களில் சுமார் 10 மில்லியனுக்கும் மேற்பட்டோர் இந்த 'Threads' செயலியைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். மேலும், இரண்டு மணி நேரத்தில் 2 மில்லியனுக்கும் மேற்பட்டோர் புதிய கணக்காளர்களாக (sign up) இணைந்துள்ளனர். இதுதொடர்பான செய்திகள் 'Twitter vs Threads' என சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. நெட்டிசன்கள் பலரும் ட்விட்டரை விமர்சித்து, மெட்டாவின் இந்த புதிய செயலியில் இணைந்து வருவதை தங்கள சமூக வலைதளங்களில் பதிவிட்டு வைரல் செய்து வருகின்றனர்.

இதையடுத்து, மெட்டாவின் இந்த புதிய செயலி ட்விட்டரை அப்படியே காப்பி அடித்துள்ளாதாக எலான் மஸ்க், கிண்டலாக மீம் ஒன்றையும் ரீ-ட்வீட் செய்து சிரித்துள்ளார். இதற்கு விமர்சனங்களும், மீம்களும் ட்விட்டரில் வான வேடிக்கையாய் வெடித்து வருகிறது.

ட்விட்டரை எலான் கைப்பற்றிய குறுகிய காலத்தில் ப்ளூ டிக், கோல்டன் டிக் கட்டணச் சர்ச்சை, ஆட்குறைப்பு நடவடிக்கை, பத்திரிகையாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கம் மற்றும் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட 'Tweet Limit' என எலான் மஸ்கின் அதிரடி நடவடிக்கைகள் நெட்டிசன்களை கடுப்பாக்கியது. இதனால் நெட்டிசன்கள் ட்விட்டரையும், எலானையும் விமர்சித்து வருகின்றனர். இந்த சமயத்தில் மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளதால் இந்த 'Threads' செயலியை நெட்டிசன்கள் கொண்டாடி வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டர் அதிக லாப நோக்கத்தைக் கைவிட்டு, தன் குறைகளைச் சரிசெய்து கொள்ளாவிட்டால் ட்விட்டர் தங்கள் பயனர்கள் இழக்க நேரிடும் என்பதே டெக் உலகில் பலரின் கருத்தாக இருந்து வருகிறது. அதுமட்டுமின்றி, ட்விட்டருக்குப் போட்டியாக இன்னும் பல செயலிகள் களமிறங்கக் காத்திருக்கின்றன. இந்த டெக் ரேஸில் ட்விட்டர் வெல்லுமா? இல்லை வீழ்ச்சியடையுமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

No comments:

Post a Comment

Pages