இன்டெல் (Intel) தரும் THUNDERBOLT. - தமிழ் IT

Latest

Friday, June 24, 2011

இன்டெல் (Intel) தரும் THUNDERBOLT.

கணனித் துறையில் இப்போதைக்குப் பாவிக்கப்படும் மிகச் சிறந்த இனைப்புகளுக்கான தொழிநுட்பம் USB தொழிநுட்பமாகும். இதில் USB 3 தொழிநுட்பத்தின் அறிமுகத்தோடு மேலதிக உதிரிப்பாகங்களுக்கும் கணனிக்கும் இடையிலான  தரவுப் பரிமாற்றத்தின் வினைத்திறன் பாரிய முன்னேற்றம் கண்டது. அது செக்கனுக்கு 5 ஜிகாபைட் எனும் அளவுக்கு பாரிய ஒரு பரிமாற்ற மட்டமாகக் காணப்பட்டது. இதன் வெற்றிகரமான வருகையோடு இன்டெல் (Intel) நிறுவனம் USB 3 ஐ விட வேகமான, அதை விடவும் வினைத்திறன் மிக்கதுமான ஒரு முறையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது, இத் தொழிநுட்பமானது THUNDERBOLT என அறிமுகப்படுத்தப்படுகிறது.

2009 ஆம் ஆண்டில் Intel Developer Forum இல் Light Peak எனும் பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இத் தொழிநுட்பத்தின் மூலம் செக்கனுக்கு 10 ஜிகாபைட் அளவு கொண்ட கோப்புகளைப் பரிமாற்ற முடியும். இதன் இன்னொரு முக்கியத்துவம் யாதெனில் இப்போது பாவனியிலுள்ள PCI – Express மற்றும்  Display Port ஆகிய நுட்பங்களுக்கு புரம்பானதான ஒரு இனைப்பாக இயங்குகின்றமையாகும். அத்தோடு வீடியோ தரவுகள் பரிமாற்றத்துக்கு உதவுவதோடு இது LAN மற்றும் Storage Devices களுக்கிடையிலும் தரவுப் பரிமாற்றத்திற்கு உதவுகிறது.

கடந்த பெப்ரவரி மாதம் 24ஆந் தேதி சந்தையில் விடப்பட்ட MacBook Pro கணனிகளில் முதன் முதலில் இந்த THUNDERBOLT இனைப்பு முறை பயன்படுத்தப்பட்டிருந்தது. இவ்வாண்டிற்குள் இத் தொழிநுட்பத்துடன் செயற்படும் சாதனங்கல் சந்தைக்குவரும் என Intel நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. Intel இன் அடுத்த இலக்கு யாதெனில் 2015ஆம் ஆண்டாகும் போது இந்த THUNDERBOLT இனைப்புத் தொழிநுட்பத்தின் வேகத்தை 5 மடங்காகக் கூட்டுவதாகும்.

Intel-Thunderbolt Intel நிறுவனத்தின் கூற்றுப்படி THUNDERBOLT  தொழிநுட்பமானது USB 3 ஐக் கைவிட்டுவிடாதெனவும், இரண்டு முறைகளும் தொடர்ந்தும் இருக்கும் தெரிய வருகிறது. இவர்களின் எதிர்பார்ப்பானது எல்லவகை வெளி இனைப்பு சாதனங்களினதும் தரவுப் பரிமாற்றத்திற்கான பொது இனைப்பு முறையாக THUNDERBOLT ஐ மாற்ருவதாகும். எதிர்காலத்தில் வெளிவரவுள்ள THUNDERBOLT நுட்பத்தில் செக்கனுக்கு 50 ஜிகாபைட் எனும் பாரிய பரிமாற்ற வேகத்துக்கு முன்னேற்ருவதே Intel இன் இலக்காகும். இதன்டிப்படையில் எதிர்காலத்தில் வெளிவரவுள்ள சாதனங்களின் இடையில் தரவுப் பரிமாறம் சாத்தியமாக்கப் படலாம் என நம்பப்படுகிறது. இதற்காக Fiber Optic கேபில்கள் பாவிக்க வேண்டியுள்ள போதிலும், செலவுகளைக் குறைக்கும் நோக்கில் இப்போது செப்பினாலான விசேட கேபல் மூலம் செயற்படுத்தப்படுகிறது. Intel நிறுவனம் கூறுவதாவது, எதிர்காலத்தில் இந்த THUNDERBOLT நுட்பம் பொது பரிமாற்ற முறையாக மாறும் என்கிறது.

1 comment:

Pages